×

வண்டித்தாவளம் அருகே மெக்கானிக் வீட்டின் முன்பு நிறுத்திய பைக் பெட்ரோல் ஊற்றி எரிப்பு

 

பாலக்காடு, டிச.27: வண்டித்தாவளம் அருகே மெக்கானிக் வீட்டிற்கு முன்பு நிறுத்தப்பட்டிருந்த பைக்கில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பாலக்காடு மாவட்டம் மீனாட்சிபுரம் பகுதியில் வண்டித்தாவளம் அருகே உள்ள கன்னிமாரி குற்றிக்கல்சள்ளையை சேர்ந்தவர் பக்தவல்சலம் (35). டி.வி மெக்கானிக். இவரது பைக் சம்பவதன்று இரவு 10.15 மணியளவில் வீட்டின் முன்பு நிறுத்தியிருந்தார்.

அப்போது மர்ம நபர் வீட்டிற்கு முன்பு நிறுத்தப்பட்ட பைக்கில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து விட்டு தப்பியுள்ளார். இந்த சம்பவம் குறித்து மீனாட்சிபுரம் காவல் நிலையத்தில் பக்தவல்சலம் புகார் மனு அளித்தார். இதனைத்தொடர்ந்து மீனாட்சிபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆய்வு மேற்கொண்டனர். மோப்ப நாயுடன், நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டு, சி.சி.டி.வி கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து, மர்ம நபரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post வண்டித்தாவளம் அருகே மெக்கானிக் வீட்டின் முன்பு நிறுத்திய பைக் பெட்ரோல் ஊற்றி எரிப்பு appeared first on Dinakaran.

Tags : Vandithavalam ,Palakkad ,Phakthavalsalam ,Kannimari Kutthikalsallai ,Meenakshipuram ,Dinakaran ,
× RELATED நெல்லியாம்பதி மலைப்பாதையில்...