×

பவானி காலிங்கராயன் வாய்க்காலில் தண்ணீர் திறப்பு

 

பவானி,டிச.27:பவானி காலிங்கராயன் அணைக்கட்டிலிருந்து வாய்க்காலில் திறக்கப்பட்ட தண்ணீரை விவசாயிகள் சிக்கனமாக பயன்படுத்தி,விவசாயப் பணிகளை மேற்கொண்டு பயன்பெறுமாறு நீர்வளத்துறை கேட்டுக் கொண்டுள்ளது. பவானிசாகர் அணையில் இருந்து நேற்று முன்தினம் முதல் 120 நாட்களுக்கு காலிங்கராயன் வாய்க்கால் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.பாசனத்துக்கு அணையில் உள்ள நீர் இருப்பு, பருவமழை மூலம் எதிர்பார்க்கப்படும் நீர்வரத்து மற்றும் குடிநீர் தேவையை கணக்கில் கொண்டு 23.04.2025 வரை 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படும்.

முதல் கட்டமாக வினாடிக்கு 300 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. தண்ணீரின் தேவைக்கேற்ப நாளொன்றுக்கு வினாடிக்கு 500 கன அடி வீதம் அதிகரிக்கப்படும்.மொத்தம் 120 நாட்களுக்கு இரண்டாம் பருவ பாசனத்திற்கு தேவைக்கேற்ப தண்ணீர் திறந்து விடப்படும்.இதன் மூலம், ஈரோடு, மொடக்குறிச்சி, கொடுமுடி வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 15,743 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறும்.விவசாயிகள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி விவசாயப் பணிகளை மேற்கொண்டு பயன் பெற வேண்டும் என நீர்வளத்துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

The post பவானி காலிங்கராயன் வாய்க்காலில் தண்ணீர் திறப்பு appeared first on Dinakaran.

Tags : Bhavani Kalingarayan ,Bhavani ,Water Resources Department ,Bhavani Kalingarayan dam ,Bhavanisagar dam ,Kalingarayan canal ,Bhavani Kalingarayan canal ,
× RELATED தொழிற்சாலை கழிவுகளால் மாசடைந்த ஏரி: தூர்வாரி சீரமைக்க கோரிக்கை