×

மனைவி மாயம்: கணவர் புகார்

ஈரோடு,ஜன.5: ஈரோடு வீரப்பன் சத்திரம் சிவா வீதியை சேர்ந்தவர் மணிகண்டன் (28). சைசிங் மில் சூப்பர் வைசர். இவரது மனைவி பரிமளா (21). இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. பரிமளா பேன்சி ஸ்டோரில் வேலை பார்த்து வருகிறார். பரிமளா நேற்று வேலைக்கு செல்லவில்லை.மணிகண்டன் பரிமளாவின் செல்போனுக்கு தொடர்பு கொண்டபோது, போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து வீட்டிற்கு வந்து பார்த்த போது பரிமளா வீட்டில் இல்லை. அக்கம்பக்கம், உறவினர்கள் வீடுகளில் தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை. இதுகுறித்து மணிகண்டன் அளித்த புகாரின் பேரில் கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான பரிமளாவை தேடி வருகின்றனர்.

The post மனைவி மாயம்: கணவர் புகார் appeared first on Dinakaran.

Tags : Erode ,Manikandan ,Erode Veerappan Satram ,Shiva Road ,Sawing Mill ,Parimala ,Pansy Store ,Dinakaran ,
× RELATED மனைவி மாயம்