×

வேலூரில் தேங்காய் விலை திடீர் உயர்வு பெரிய தேங்காய் ₹22 முதல் ₹42 வரை விற்கப்படுகிறது சபரிமலை, மேல்மருவத்தூர் சீசன் காரணமாக

வேலூர், டிச.27: சபரிமலை, மேல்மருவத்தூர் சீசன் காரணமாக வேலூரில் தேங்காய் விலை திடீரென என உயர்ந்துள்ளது. வேலூர் நேதாஜி மார்க்கெட்டுக்கு வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்கள் மட்டுமின்றி, பொள்ளாச்சியில் இருந்தும் தேங்காய் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. ஒவ்வொரு 3 நாள் இடைவெளியில் 10 டன் தேங்காய்கள் லாரிகள் மூலம் வருகிறது. இதில் உள்ளூர் தேங்காய் சாதாரண நாட்களில் ₹12 முதல் ₹20 வரையும், பண்டிகை போன்ற குறிப்பிட்ட நாட்களில் ₹20 வரையும் விற்பனையாகும். பொள்ளாச்சி தேங்காய் ₹35 வரை விற்பனையாகும். பொள்ளாச்சி தேங்காய் கொள்முதல் விலை என்பது இறக்குமதி செலவுடன் சேர்த்து டன் ஒன்று ₹40 ஆயிரம் என இருந்தது.

இந்நிலையில் கடந்த மாதம் கார்த்திகை மாதம் பிறந்தவுடன், சபரிமலை செல்லும் பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினர். மேலும் ஐயப்ப பக்த சபாக்களில் தினமும் பூஜைகளும் நடந்து வருகிறது. இதனால் தேங்காய் தேவை மற்ற நாட்களை காட்டிலும் தற்போது அதிகரித்துள்ளது. மேலும் தற்போது மேல்மருவத்தூர் கோயிலுக்கும் பெண்கள், ஆண்களும் சென்று வருவதால் தேங்காய் தேவை அதிகரித்துள்ளது. இதனால் வரத்தும் அதிகரித்துள்ளதுடன், தேங்காய் விலையும் ஏற்றம் கண்டுள்ளது. தற்போது வேலூர் நேதாஜி மார்க்கெட்டுக்கு தேங்காய் வரத்து 13 முதல் 15 டன்னாக அதிகரித்துள்ளது. பொள்ளாச்சி தேங்காய் டன் ஒன்று ₹60,000க்கு இறக்குமதியானது. ஏறத்தாழ டன்னுக்கு ₹15 ஆயிரம் வரை விலை ஏறியுள்ளது. இதனால் சில்லறையில் பொள்ளாச்சி பெரிய தேங்காய் ₹22 முதல் ₹42 வரை விற்கப்படுகிறது. உள்ளூர் சிறிய தேங்காய் ₹13 முதல் ₹22 வரை விற்பனை செய்யப்படுகிறது என வியாபாரிகள் தெரிவித்தனர்.

The post வேலூரில் தேங்காய் விலை திடீர் உயர்வு பெரிய தேங்காய் ₹22 முதல் ₹42 வரை விற்கப்படுகிறது சபரிமலை, மேல்மருவத்தூர் சீசன் காரணமாக appeared first on Dinakaran.

Tags : Vellore ,Vellore Netaji Market ,Tirupattur ,Pollachi ,Dinakaran ,
× RELATED ஜோடியாக சுற்றிய பெண் ஏட்டு, காவலர்...