×

பொதுமக்கள் குறை தீர்க்கும் சிறப்பு முகாம்

தர்மபுரி, டிச.27: தர்மபுரி மாவட்ட காவல் துறை சார்பில், பொதுமக்கள் குறைதீர்க்கும் சிறப்பு முகாம் நேற்று நடந்தது. இதில் 60 புகார் மனுக்கள் மீது உடனடி தீர்வு காணப்பட்டது. தர்மபுரி மாவட்ட காவல்துறை சார்பில், நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம், எஸ்பி மகேஸ்வரன் தலைமையில் நடந்தது. ஏடிஎஸ்பி ஸ்ரீதரன் முன்னிலை வகித்தார். இந்த முகாமில் மாவட்டம் முழுவதும் 31 காவல் நிலையங்களில் இருந்து புகார் மனுதாரர்கள் நேரில் வரவழைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. நிலத்தகராறு, சொத்து தகராறு, அடிதடி தகராறு, பொது வழி பிரச்னை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மொத்தம் 60 புகார் மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொண்டு, 60 மனுக்கள் மீதும் விசாரணை முடித்து வைக்கப்பட்டது. முகாமில் புதியதாக 9 மனுக்கள் பெறப்பட்டது. முகாமில் டிஎஸ்பிக்கள், இன்ஸ்பெக்டர்கள், எஸ்ஐக்கள் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

The post பொதுமக்கள் குறை தீர்க்கும் சிறப்பு முகாம் appeared first on Dinakaran.

Tags : Dharmapuri ,Dharmapuri District Police Department ,Dharmapuri District Police ,Dinakaran ,
× RELATED பொதுமக்களிடம் குறைகேட்பு முகாம்