×

திண்டிவனம் திந்திரிணீஸ்வரர் கோயிலில் தருமபுர ஆதீனம் தரிசனம்

திண்டிவனம்: திண்டிவனம் திந்திரிணீஸ்வரர் கோயிலில் தருமபுர ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம் மாசிலாமணி தேசிகர் பரமாச்சாரியா சுவாமிகள் தரிசனம் செய்தார். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் தருமபுர ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம் மாசிலாமணி தேசிகர் பரமாச்சாரியா சுவாமிகள் சஷ்டியப்ப பூர்த்தியை முன்னிட்டு தொடர்ந்து 7 நாட்களில் 300 பாடல் பெற்ற சிவாலயங்களில் தரிசனம் செய்து வருகிறார். அதனை முன்னிட்டு திண்டிவனம் மரகதாம்பிகை உடனுறை திந்திரிணீஸ்வரர் கோயிலில் நேற்று தரிசனம் செய்தார்.

அவருக்கு சிவ கைலாய வாத்தியம் முழங்க கோயில் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து மூலவர்கள் திந்திரிணீஸ்வரர் மற்றும் மரகதாம்பிகை அம்மனை தரிசனம் செய்தார். இதில் திமுக மாவட்ட பொறுப்பாளர் சேகர், முன்னாள் எம்எல்ஏ சேதுநாதன், மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் கோபிநாத் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் பக்தர்கள் கலந்துகொண்டனர்.

 

The post திண்டிவனம் திந்திரிணீஸ்வரர் கோயிலில் தருமபுர ஆதீனம் தரிசனம் appeared first on Dinakaran.

Tags : Dharmapura Aatheenam ,Tindivanam Tindriniswarar Temple ,Tindivanam ,Dharmapura Aatheenam 27th Gurumaha Sannidhanam ,Desikar Paramacharya Swamigal ,Dharmapura ,Aatheenam 27th Gurumaha Sannidhanam ,Villupuram ,Sashtiyappa… ,Tindriniswarar Temple ,
× RELATED திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு பல...