திருப்பரங்குன்றம், டிச. 25: திருப்பரங்குன்றத்தில் எம்ஜிஆர் நினைவு நாளை முன்னிட்டு அதிமுக சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் எம்ஜிஆரின் 37வது நினைவு நாளை முன்னிட்டு திருப்பரங்குன்றம் 16 கால் மண்டபம் முன்பு அமைக்கப்பட்ட எம்ஜிஆரின் திருவுருவ படத்திற்கு திருப்பரங்குன்றம் எம்எல்ஏ ராஜன் செல்லப்பா மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் அக்கட்சியின் சார்பில் சுமார் 300பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அக்கட்சியின் மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர் வக்கில் ரமேஷ், ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
The post எம்ஜிஆர் நினைவு தினத்தையொட்டி அதிமுக சார்பில் அன்னதானம் appeared first on Dinakaran.