- இந்தியா
- மேற்கிந்திய தீவுகள் மகளிர் கிரிக்கெட் அணி
- வதோதரா
- ஸ்மிருதி மந்தனா
- பிரதிகா ராவல்
- ஹர்லீன் தியோல்
- ஜெமிமா…
- தின மலர்
வதோதரா: வெஸ்ட் இண்டீஸ் மகளிர் கிரிக்கெட் அணிக்கு எதிரான 2வது ஒரு நாள் போட்டி, வதோதராவில் நேற்று நடந்தது. டாஸ் வென்று களமிறங்கிய இந்திய அணி வீராங்கனைகள் ஸ்மிருதி மந்தனா 53, பிரதிகா ராவல் 76, ஹர்லீன் தியோல் 115, ஜெமிமா ரோட்ரிகஸ் 52 ரன் குவித்தனர். 50 ஓவர் முடிவில் இந்தியா 5 விக்கெட் இழப்புக்கு 358 ரன் எடுத்தது.
பின், 359 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் வீராங்கனைகள் அடுத்தடுத்து வீழ்ந்ததால் 10.4 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 69 ரன் எடுத்திருந்தனர். இருப்பினும் கேப்டன் ஹேலி மாத்யூஸ் அதிரடியாக ஆடி சதமடித்ததால் 5வது விக்கெட்டுக்கு 112 ரன் சேர்ந்தது. 46.2 ஓவர் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் 243 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி 115 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
The post வெ.இ.மகளிருடன் 2வது ஓடிஐ இந்தியா அபார வெற்றி appeared first on Dinakaran.