×

சீனியர் நேஷனல்ஸ் பேட்மின்டன்: ஒற்றையர் பிரிவில் ரகு, தேவிகா சாம்பியன்

பெங்களூரு: சீனியர் நேஷனல்ஸ் பேட்மின்டன் ஒற்றையர் இறுதிப் போட்டியில் கர்நாடகா வீரர் ரகு, முன்னாள் சாம்பியன் மிதுன் மஞ்சுநாத்தை 14-21, 21-14, 24-22 என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். பெண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டியில் தெலுங்கானாவை சேர்ந்த சிரியவன்ஷி வாலிஷெட்டியை, அரியானா வீராங்கனை தேவிகா சிஹாக், 21-15, 21-16 என்ற நேர் செட் கணக்கில் அபாரமாக வென்று சாம்பியன் பட்டம் பெற்றார். பெண்கள் இரட்டையர் பிரிவில் நடந்த போட்டியில் தமிழகத்தின் வர்ஷினி, கேரளாவின் ஆரத்தி சாரா இணை, பிரியா தேவி கொஞ்செங்பம், ஸ்ருதி மிஸ்ரா இணையை 21-18, 20-12, 21-17 என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் வென்றனர்.

The post சீனியர் நேஷனல்ஸ் பேட்மின்டன்: ஒற்றையர் பிரிவில் ரகு, தேவிகா சாம்பியன் appeared first on Dinakaran.

Tags : Senior Nationals Badminton ,Raghu ,Devika ,Bengaluru ,Karnataka ,Mithun Manjunath ,Telangana ,Sirivanshi… ,Dinakaran ,
× RELATED திருமணம் செய்துகொள்ள இருந்த நிலையில்...