- திருவள்ளூர்
- அரும்பாக்கம்
- பங்காரம்பேட்டை
- சென்ட்ராயன்பாளையம்
- டிபி புரம்
- கோவிந்தராஜ் குப்பம்
- ஓதாப்பாய்
- மாமந்தூர்
- சூறாவளி
திருவள்ளூர்: பெஞ்சல் புயலினால் பாதிக்கப்பட்டுள்ள பழங்குடியினர் மற்றும் பூண்டி ஒன்றியத்தில் அரும்பாக்கம், பங்காரம் பேட்டை, சென்றாயன் பாளையம், டிபி புரம், கோவிந்தராஜ் குப்பம் ஒதப்பை, மாமண்டூர் உள்பட 16 கிராமங்களை சேர்ந்த 156 பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களுக்கு அரிசி, மளிகை பொருட்கள் மற்றும் 75 குடும்பங்களுக்கு தார்ப்பாய்களை சில்ரன் பிலீவ் நிறுவனத்தின் உதவியுடன் ஐஆர்சிடிஎஸ் இயக்குனர் ஸ்டீபன் வழங்கினார். பேரிடர் காலங்களில் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்ற அவசியம் குறித்தும், பேரிடர் தடுத்தல் பணிகள் குறித்தும், முன்னெச்சரிக்கையாக கடைபிடிக்க வேண்டிய அவசியம் குறித்தும் முதியோர், குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள், மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்பாக இருப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய அம்சங்கள் குறித்தும் எடுத்து கூறப்பட்டது. நிகழ்ச்சியில் ஐஆர்சிடிஎஸ் நிறுவன திட்ட மேலாளர் விஜயன், களப்பணியாளர்கள் தபித்தாள் கவிதா, பூங்கொடி, பவானி, ரேவதி, பழனி ஆகியோர் கலந்து கொண்டனர்.
The post பெஞ்சல் புயலினால் பாதிக்கப்பட்ட 156 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் appeared first on Dinakaran.