துருக்கி: பிலிகிசர் மாகாணத்தில் உள்ள கரேசி என்ற வடமேற்கு துருக்கியில் ஆயுத தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 12 பேர் உயிரிழந்த நிலையில் நான்கு பேர் படுகாயம் அடைந்துள்ளனர். துருக்கியில் உள்ள ஆயுத தொழிற்சாலையில் உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தைகளுக்கு வெடிமருந்துகள், வெடிபொருட்கள் மற்றும் ஏறி பொருட்கள் உருவாக்குவதில் துருக்கியே ஒரு முன்னணி பாதுகாப்பு ஏற்றுமதியாளராக உள்ளது.
இந்த நிலையில், இன்று மதியம் பாலிகேசிர் மாகாணத்தில் அமைந்துள்ள தொழிற்சாலையின் புல்லட் காப்ஸ்யூல் தயாரிக்கப்படும் பகுதியில் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இந்த வெடிவிபத்தில் 12 பேர் உயிரிழந்த உயிரிழந்தனர். வெடிவிபத்தில் காப்ஸ்யூல் தயாரிப்பு கட்டிடம் இடிந்து விழுந்ததாகவும், சுற்றியுள்ள கட்டிடங்கள் சிறிய அளவில் சேதம் அடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும், மின்வெட்டு காரணமாக கட்டிடத்திற்குள் இருக்கக்கூடிய நபர்களை மீட்பதற்காக தீயணைப்பு வீரர்கள் மற்றும் சுகாதார மற்றும் பாதுகாப்பு பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. வெடிப்புக்கான காரணத்தை விசாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளதாகம் தெரியவந்துள்ளது.
The post துருக்கியில் உள்ள ஆயுத தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 12 பேர் உயிரிழப்பு 4 பேர் காயம்..!! appeared first on Dinakaran.