- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- வானிலையியல்
- சர்வே
- சென்டர்
- சென்னை
- திருவள்ளூர்
- காஞ்சிபுரம்
- செங்கல்பட்டு
- Ranipetta
- வேலூர்
- வானிலை ஆய்வு மையம்
சென்னை: தமிழ்நாட்டில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் இரவு 10 மணிக்குள் மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
வடதமிழக கடலோரப் பகுதிகளில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று அதே இடத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வழுவிழக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக இன்று முதல் 30ம் தேதி வரை வடதமிழகத்தில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், சென்னை உள்பட 6 மாவட்டங்களில் இரவு 10 மணிக்குள் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய 6 மாவட்டங்களில் இரவு 10 மணிக்குள் மழைக்கு உள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னையில் இன்று காலை முதல் பல்வேறு இடங்களில் சாரல் மழை பெய்தது.
The post தமிழ்நாட்டில் இன்று இரவு 10 மணிக்குள் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் appeared first on Dinakaran.