×

கோவை மெட்ரோ ரயில் திட்டம்; பிப்ரவரியில் நிலம் எடுப்பு துவக்கம்

கோவை மெட்ரோ ரயில் திட்டப்பணிகளுக்கான நிலம் கையகப்படுத்தும் பணி, பிப்ரவரி மாதம் தொடங்கும் என்று சென்னை மெட்ரோ நிறுவன மேலாண்மை இயக்குனர் சித்திக் தகவல் தெரிவித்துள்ளார். நிலம் கையகப்படுத்துதல் உள்ளிட்டவை குறித்து அதிகாரிகளுடன் இன்று கலந்து ஆலோசனை நடத்தப்பட்டது. கோவையில் 32 ரயில் நிலையங்கள் இருக்கும் வகையில் மெட்ரோ ரயில் திட்டம் அமைய உள்ளது. கோவையில் ரூ.10,740 கோடியில் 34.8 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும்.

The post கோவை மெட்ரோ ரயில் திட்டம்; பிப்ரவரியில் நிலம் எடுப்பு துவக்கம் appeared first on Dinakaran.

Tags : Coimbatore Metro Rail ,Chennai Metro Corporation ,Managing Director ,Siddique ,Coimbatore ,Dinakaran ,
× RELATED வார இறுதி நாட்களை முன்னிட்டு சிறப்பு பஸ்கள் இயக்கம்