திருத்தணி: திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு அருகே, ராமலிங்கபுரம் கிராமத்தில் உள்ள பெட்டிக்கடையில் மது பாட்டில்கள் மற்றும் போதை பொருட்களை பதுக்கி, கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து, திருவாலங்காடு இன்ஸ்பெக்டர் ராஜகோபால் மற்றும் போலீசார் நேற்று காலை சந்திரசேகர்(45) என்பவரின் வீட்டில் திடீர் சோதனை நடத்தினர். சோதனையில், அவரது வீட்டில் பதுக்கி வைத்திருந்த 57 டாஸ்மாக் மது பாட்டில்கள், 570 கிராம் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து, சந்திரசேகரை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post திருவாலங்காடு அருகே வீட்டில் மதுபானம், போதைப்பொருள் விற்றவர் கைது appeared first on Dinakaran.