சென்னை: சென்னை கோயம்பேடு சந்தையில் வரத்து அதிகரிப்பால் வெங்காயம், தக்காளி, பூண்டு விலை குறைந்துள்ளது. சென்னை கோயம்பேடு காய்கறி சந்தை சென்னை மக்களின் காய்கறி தேவையை பூர்த்தி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது. கோயம்பேடு காய்கறி சந்தையில் இருந்து தான் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு காய்கறி விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைக்கு காய்கறிகள் விற்பனைக்காக லாரிகளில் கொண்டு வரப்படுகின்றன. வரத்து குறையும் போது காய்கறிகளின் விலை அதிகரிப்பதும், வரத்து அதிகரிக்கும் போது விலை குறைவதும் இயல்பான ஒன்று.
இந்த நிலையில், சென்னை கோயம்பேடு சந்தையில் வரத்து அதிகரிப்பால் வெங்காயம், தக்காளி, பூண்டு விலை குறைந்துள்ளது. கடந்த வாரத்தில் வெங்காயம் ரூ.60 முதல் ரூ.70 வரையும், தக்காளி ரூ.30 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தன. இந்த நிலையில், இன்று மொத்த வியாபாரத்தில் வெங்காயம் கிலோ ரூ.50க்கும், தக்காளி ரூ.20க்கும், பூண்டு ரூ.350க்கும் விற்பனையாகின்றன. பூண்டு விலை ரூ.50 வரை குறைந்துள்ளது. சின்ன வெங்காயத்தின் விலை சற்று உயர்ந்துள்ள நிலையில், சில்லறை விலையில் கிலோ ரூ.100க்கு விற்பனையாகிறது.
The post சென்னை கோயம்பேடு சந்தையில் வரத்து அதிகரிப்பால் அதிரடியாக குறைந்த வெங்காயம், தக்காளி, பூண்டு விலை: ரூ.60 முதல் ரூ.70 வரை விலை குறைவு appeared first on Dinakaran.