- திருவள்ளூர் மேற்கு மாவட்டம் AIADMK
- கிறிஸ்துமஸ்
- திருவள்ளூர்
- மேற்கு மாவட்டம் அஇஅதிமுக
- மேற்கு மாவட்ட
- அமைச்சர்
- பி. ரமணா
- கிரிஸ்துவர்
- தின மலர்
திருவள்ளூர்: திருவள்ளூரில் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் கேக் வெட்டி கிறிஸ்துமஸ் விழா மற்றும் ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பி.வி.ரமணா தலைமை தாங்கினார். கிறிஸ்தவ மத போதகர் பிரான்சிஸ், நகர செயலாளர் ஜி.கந்தசாமி, ஒன்றிய செயலாளர் ராமஞ்சேரி எஸ்.மாதவன் முன்னிலை வகித்தனர்.
விழாவில் அமைப்பு செயலாளர், முன்னாள் அமைச்சர் பா.பெஞ்ஜமின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஏழை எளிய மக்களுக்கு இலவச சேலை, பேண்ட், சட்டை மற்றும் பிரியாணி ஆகியவற்றை வழங்கி பேசினார். அப்போது, மக்களின் நலனுக்காக திட்டங்களை கொடுக்க கூடிய இயக்கமாக அதிமுக திகழ்கிறது. தற்போது எதிர்கட்சியாக இருந்தாலும் ஏழை, எளிய மக்களுக்கு உதவி செய்யக் கூடிய இயக்கமாக உள்ளது என்றார். பி.வி.ரமணா பேசும்போது, அதிமுக என்றைக்குமே மக்களுக்காக உழைக்கின்ற இயக்கம். சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பாக இருக்கும் இயக்கம். சிறுபான்மை மக்களுக்கு அதிமுக என்றும் துணை நிற்கும் என்றார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட அணிகளின் நிர்வாகிகள் பி.சவுந்தர்ராஜன், எஸ்.ஏ.நேசன், பி.வி.பாலாஜி, ஆர்.ராஜி, கவுன்சிலர்கள் எல்.செந்தில்குமார், எம்.நரேஷ்குமார், புங்கத்தூர் டி.தேவா, டி.பி.சுந்தரேசன், சந்திரசேகர், ஆனந்தகுமார், குமரேசன், வள்ளிபேட்டை சீனிவாசன், நெல்சன்முத்து, பிரதீப், பிரவீன் சதீஷ்குமார், விஜயகுமார், அனீஸ் ராஜா, தமிழ்ச்செல்வி, திலகவதி, கோடீஸ்வரி, நாகம்மாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
The post திருவள்ளூர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் கிறிஸ்துமஸ் முன்னிட்டு நல திட்ட உதவிகள்: முன்னாள் அமைச்சர்கள் வழங்கினர் appeared first on Dinakaran.