×

45 பேருக்கு பணி நியமன ஆணை

 

திருப்பூர், டிச.21: திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நேற்று நடந்தது. மாவட்ட இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் வைஷாலி தலைமை தாங்கினார். இதில், எழுத படிக்க தெரிந்தவர்கள் முதல் முதுநிலை பட்டதாரிகள் மற்றும் ஐ.டி.ஐ., டிப்ளமோ படித்தவர்கள் என 104 பேர் கலந்து கொண்டனர்.

இதில் 25 நிறுவனங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்று தங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்தனர். இதில், ஆண்கள் 17 பேர் மற்றும் பெண்கள் 28 பேர் என மொத்தம் 45 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இதில் 5 பேர் மாற்றுத்திறனாளிகள் அடங்குவர். அவர்களுக்கு பணி ஆணை உடனே வழங்கப்பட்டது.

The post 45 பேருக்கு பணி நியமன ஆணை appeared first on Dinakaran.

Tags : Tiruppur ,Tiruppur Collectorate ,District Junior Employment Officer ,Vaishali ,Dinakaran ,
× RELATED அனைத்து வணிக நிறுவனங்களில் தமிழில்...