×

ஆறுமுகநேரி, ஆத்தூர் பகுதியில் கலங்கலான குடிநீர் விநியோகம்

ஆறுமுகநேரி, டிச. 21: ஆத்தூர், ஆறுமுகநேரி பகுதியில் கலங்கலான குடிநீர் விநியோகம் செய்யப்படுவதால் பொதுமக்கள் அதிருப்தியடைந்து உள்ளனர். நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த வாரம் பெய்த கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தற்போது வெள்ளம் குறைந்தாலும், கலங்கலாகவே தண்ணீர் செல்கிறது. இதன் காரணமாக தாமிரபரணி ஆற்றில் உறைகிணறு அமைத்து குடிநீர் விநியோகிக்கப்படும் பகுதிகள் அனைத்திலும் தண்ணீர் கலங்கலாகவே விநியோகிக்கப்பட்டு வருகிறது. எனவே குடிநீரை காய்ச்சி ஆற வைத்து குடிக்குமாறு சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது. இதேபோல் ஆறுமுகநேரி, ஆத்தூர் பகுதியிலும் குழாய்களில் கலங்கலான குடிநீரே வருவதால் மக்கள் அதிருப்தியடைந்து உள்ளனர்.இந்த தண்ணீரை உபயோகப்படுத்த முடியாத நிலை உள்ளதால், குடிநீர் கேன்களை விலைக்கு வாங்கி பயன்படுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்து உள்ளனர். மழை நின்று ஒரு வாரத்தை கடந்திருப்பதால், நீரேற்று நிலையங்களை பார்வையிட்டு சுத்தம் செய்து குடிநீரை சுத்தமாக விநியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post ஆறுமுகநேரி, ஆத்தூர் பகுதியில் கலங்கலான குடிநீர் விநியோகம் appeared first on Dinakaran.

Tags : Arumuganeri, Athur ,Arumuganeri ,Athur ,Nellai ,Thoothukudi ,Thamirabarani river ,Dinakaran ,
× RELATED கடந்த 3 நாட்களாக பெய்த மழையால் ஆத்தூர்,...