×

அரசு திட்டத்தில் முறைகேடு நடந்தால் இளைஞர்கள் கேள்வி கேட்க வேண்டும்: ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் பேச்சு

திருமலை: ஆந்திர மாநிலம், பார்வதிபுரம் மன்யம் மாவட்டத்தில் உள்ள மலை கிராமங்களில் முறையாக சாலை வசதி இல்லாமல் இருந்தது. இதனால் அவசர காலங்களில் உடல் நலம் பாதிக்கப்பட்டவர்களை டோலி கட்டி சுமந்து செல்லும் நிலை ஏற்பட்டு வருந்தது. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர். சட்டப்பேரவை தேர்தல் வாக்குறுதியில் துணை முதல்வர் பவன் கல்யாண் மலை கிராமங்களில் சாலை அமைத்து தரப்படும் என கூறினார்.

அதனடிப்படையில், பார்வதிபுரம் மன்யம் வட்டம் பழங்குடியின கிராமங்களில் சாலை பணிகள் ெதாடக்க விழா நேற்று நடைபெற்றது. இதற்காக துணை முதல்வர் பவன் கல்யாண், பழங்குடியினர் மற்றும் பெண்கள், குழந்தைகள் நலத்துறை அமைச்சர் கும்மிடி சந்தியாராணியுடன் மழையில் நனைந்தபடி பாகுஜோலா கிராமத்திற்கு நடந்து சென்றார்.

அதைத்தொடர்ந்து துணை முதல்வர் கூறுகையில், ‘ என்னை பணி செய்ய விடுங்கள், எனக்கு கீழ் உள்ள அதிகாரிகள், அமைச்சர்கள், எம்.எல்.ஏக்களை எப்படி வேலை வாங்க வேண்டும் என்பது எனக்கு தெரியும். அவர்களை பணி செய்ய வைப்பேன். இளைஞர்களும் கேள்வி கேட்க வேண்டும், சாலை தரமாக போடப்படுகிறதா? அரசு திட்டத்தில் முறைகேடு நடந்தால் கேள்வி கேட்க வேண்டும். கேள்வி கேட்காவிட்டால் யாரும் எதையும் மாற்ற முடியாது’ என கூறினார்.

The post அரசு திட்டத்தில் முறைகேடு நடந்தால் இளைஞர்கள் கேள்வி கேட்க வேண்டும்: ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் பேச்சு appeared first on Dinakaran.

Tags : Andhra Pradesh ,Deputy Chief Minister ,Pawan Kalyan ,Tirumala ,Parvathypuram Manyam district ,Andhra ,Pradesh ,
× RELATED ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணுக்கு...