×

யூடியூபர் சங்கரை 24ம் தேதி வரை சிறையிலடைக்க கோர்ட் உத்தரவு

மதுரை: கஞ்சா வழக்கில் விசாரணைக்கு ஆஜராகாததால் பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்ட யூடியூபர் சங்கர், கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். நீதிமன்ற காவல் நிறைவடைந்ததால், அவர் நேற்று மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு நீதிமன்ற நீதிபதி செங்கமலச்செல்வன் முன் மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரது ஜாமீன் மனு மீது 24ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் எனக் கூறிய நீதிபதி, அதுவரை சங்கரை மதுரை மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டார். தேவைப்பட்டால் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறலாம் எனவும் நீதிபதி உத்தரவிட்டார். அவர்மீதான கஞ்சா வழக்கு விசாரணை 2வது கூடுதல் மாவட்ட போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.

The post யூடியூபர் சங்கரை 24ம் தேதி வரை சிறையிலடைக்க கோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : YouTuber ,Shankar ,Madurai ,Madurai Central Jail ,Madurai District Narcotics Prevention Court ,Judge ,Chengamalchelvan ,Sankar ,
× RELATED கஞ்சா வழக்கில் யூடியூபர் சங்கர் சிறையிலடைப்பு