- காங்கிரஸ்
- திண்டுக்கல்
- அமித் ஷா
- திண்டுக்கல் கார்ப்பரேஷன்
- காங்கிரஸ் கட்சி
- மத்திய அமைச்சர்
- அம்பேத்கர்
- ஜனாதிபதி
- துரை மணிக்கந்தன்
- தின மலர்
திண்டுக்கல், டிச .20: திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சி சார்பில் அண்ணல் அம்பேத்கரை அவமதிக்கும் வகையில் பேசிய ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநகர மாவட்ட தலைவர் துரை மணிகண்டன் தலைமை வகித்தார். பொது செயலாளர் வேங்கை ராஜா, மகிளா காங்கிரஸ் தலைவி ரோஜா பேகம், எஸ்சி எஸ்டி பிரிவு தலைவர் காளிராஜ் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் அமித்ஷாவை கண்டித்தும், பதவி விலக கோரியும் கோஷமிட்டனர். இதில் இளைஞரணி தலைவர் அலியார், துணை தலைவர்கள் அப்துல் ரகுமான், காஜா மைதீன், இந்திய தேசிய ஒருமைப்பாட்டு கழக மாநில தலைவர் அப்துல் ஜப்பார், பொதுக்குழு உறுப்பினர் சிவாஜி, பகுதி செயலாளர் நாகலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
The post திண்டுக்கல்லில் அமித்ஷாவை கண்டித்து காங்கிரசார் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.