×

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில்

பகுதி-2

எப்பொழுது நீங்கள் ஐந்து பிறந்த குழந்தைகளை நீங்க பாக்கறீங்களோ? அன்று உங்கள் சொத்து பிரச்னை தீர்வுக்கு வரும் என சொல்லியிருந்தேன். நான்கு வாரம் முடிந்து ஐந்தாவது வாரம் பரிகாரம் செய்து முடித்து பின் வெளியே வரும் பொழுது ஐந்து பிறந்த குழந்தைகளை கண்டார். அன்று மறுநாளே நீதிமன்ற தீர்ப்பு இவருக்கு சாதகமாக வந்தது.

வாழை இலையில் கோதுமையில் செய்த ஏதாவது பண்டம் அல்லது தயிர் சாதம், ஸ்வீட் இந்த கோயிலில் இருக்கும். கருப்புநிறப் பசுவுக்கு உணவாக கொடுத்தால் விரைவாக திருமணப் பிராப்தி உண்டாகும். திருமணத் தடை விலகும்.  தோஷமும் விலகும்.

பாகப்பிரிவினை பிரச்னை உள்ளவர்களுக்கு இக்கோயிலுக்கு வெள்ளிக்கிழமை சென்று நல்லெண்ணெயும் பன்னீரும் அபிஷேகம் செய்துவந்தால் பாகப்பிரிவினை பிரச்னை தீரும். ஆட்டிசம் நரம்புப் பிரச்னை உள்ளவர்கள் இக்கோயிலில் கருப்புநிற இரட்டைப் பசுவுக்கு நல்லெண்ணெயில் சுட்ட கோதுமை ரொட்டி உணவாக கொடுத்து வந்தால் ஆட்டிசம் குணமாகும்.

அதோடு ஸ்தல விருட்சத்தை தொட்டு வணங்கி வந்தால். ஆட்டிசம் சீக்கிரமாக குணமாகும். பிரசித்தி பெற்ற பஞ்ச பூதத்தலங்களில் பூமி ஸ்தலமாக இக்கோயில் சிறப்புற விளங்குகிறது. சூரியன் – சனி சேர்க்கப் பெற்றவர்கள் இக்கோயிலுக்கு சென்று வந்தால் நிறைய நற்பலன்கள் உண்டாகும்.

The post காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் appeared first on Dinakaran.

Tags : Kanchipuram Ekambaranathar Temple ,Dinakaran ,
× RELATED காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில்