×

தென்பசிபிக் கடலில் பயங்கர நிலநடுக்கம்

வெல்லிங்டன்: தெற்கு பசிபிக் கடலில் உள்ள வனுவாட்டு தீவில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.3 ஆக பதிவாகி இருந்தது. நிலநடுக்கத்தை அடுத்து தீவில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புக்கள் குறித்து உடனடியாக தகவல் எதுவும் கிடைக்கவில்லை. ஆனால் போர்ட் விலாவில் 3 மாடி கட்டிடம் உள்ளிட்டவை இடிந்து கிடக்கிறது. அங்கு மீட்பு பணிகள் நடந்து வருகின்றது. பல தூதரக கட்டிடங்களும் சேதமடைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

The post தென்பசிபிக் கடலில் பயங்கர நிலநடுக்கம் appeared first on Dinakaran.

Tags : South Pacific Ocean ,Wellington ,Vanuatu ,Dinakaran ,
× RELATED பசிபிக் கடலில் வனுவாட்டு தீவு நாடு...