மாஸ்கோ: உலகம் முழுவதும் தற்போது உயிர்க்கொல்லி நோயாக பார்க்கப்படும் புற்று நோய்க்கு ரஷ்யாவில் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புற்றுநோய்க்கு எதிரான எம்ஆர்என்ஏ வகை தடுப்பூசியை ரஷ்யா உருவாக்கியுள்ளது. 2025ம் ஆண்டு தொடக்கத்தில் இந்த தடுப்பூசி அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது. இந்த தடுப்பூசி புற்றுநோயாளிகளுக்கு இலவசமாக விநியோகிக்கப்படும் என்று ரஷ்ய சுகாதார அமைச்சகத்தின் கதிரியக்க மருத்துவ ஆராய்ச்சி மையத்தின் பொது இயக்குனர் ஆண்ட்ரே கப்ரின் தெரிவித்தார்.
தடுப்பூசியின் முன் மருத்துவ பரிசோதனைகள், புற்றுநோய் கட்டி வளர்ச்சி மற்றும் சாத்தியமான மெட்டாஸ்டேஸ்களை அடக்கியதை ரஷ்யாவில் தடுப்பூசியை கண்டுபிடித்த கமலேயா நேஷனல் ரிசர்ச் சென்டர் பார் எபிடெமியாலஜி மற்றும் மைக்ரோபயாலஜி தலைவர் அலெக்சாண்டர் ஜின்ட்ஸ்பர்க் தெரிவித்தார். எம்ஆர்என்ஏ அல்லது மெசஞ்சர் ஆர்என்ஏ தடுப்பூசிகள் நமது உயிரணுக்களுக்கு ஒரு புரதத்தை அல்லது வைரசைப் போன்ற ஒரு புரதத்தின் ஒரு பகுதியை உருவாக்குகிறது. இந்த புரதம் உருவான பின்னர் நம் உடலுக்குள் நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டுகிறது. இந்த தடுப்பூசிகளை உருவாக்க சிறிது நேரம் எடுக்கும். ஒரு தடுப்பூசி கணித அடிப்படையில் மேட்ரிக்ஸ் முறைகளைப் பயன்படுத்தி உருவாக்கப்படுகிறது. அதாவது நியூரல் நெட்வொர்க் கம்ப்யூட்டிங், இந்த நடைமுறைகள் அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் வரை ஆகும். ஆனால் புற்றுநோய் வளர்ச்சியை தடுப்பதை உறுதி செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
The post புற்றுநோய்க்கு தடுப்பூசி கண்டுபிடித்தது ரஷ்யா: அடுத்த ஆண்டு முதல் இலவசமாக சப்ளை appeared first on Dinakaran.