×

பாதுகாப்பு கேட்டு குமராட்சி காவல் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்

காட்டுமன்னார்கோவில், டிச. 17: காட்டுமன்னார்கோவில் அடுத்த குமராட்சி வ.உ.சி நகரை சேர்ந்தவர் சாமிதுரை மகன் ராஜேஷ் (24). இவர் குமராட்சியில் உள்ள தனது பாட்டி வீட்டில் தங்கி திருப்பூர் அருகே உள்ள அவினாசி சாலையில் பெட்ரோல் பங்க் ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார்.இவருக்கு சொந்த ஊர் அரியலூர் மாவட்டம் கோவில் வாழ்க்கை. இவரும், குமராட்சி பகுதியை சேர்ந்த வித்யா (18) என்பவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. பெற்றோர் இவர்களுடைய காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் ராஜேஷ்சும், வித்யாவும் வீட்டை விட்டு வெளியேறி ராஜேஷ் வேலை பார்க்கும் அவினாசி பகுதியில் உள்ள ஒரு கோயிலில் திருமணம் செய்துகொண்டனர்.பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், திருமணம் செய்துகொண்ட இருவரும் பாதுகாப்பு கேட்டு குமராட்சி போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இது சம்பந்தமாக இருவரின் பெற்றோரையும் காவல் ஆய்வாளர் தேவேந்திரன் வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தி இருவரும் மேஜர் என்பதால் அவர்கள் விருப்பப்படி திருமணம் செய்துகொண்டனர் என தெரிவித்து, காதலன் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

The post பாதுகாப்பு கேட்டு குமராட்சி காவல் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம் appeared first on Dinakaran.

Tags : Kumaratchi ,police station ,Kattumannarkovil ,Rajesh ,Samidurai ,Kumaratchi VOC Nagar ,Avinashi Road ,Tiruppur… ,Kumaratchi police station ,Dinakaran ,
× RELATED வீட்டில் பதுக்கி வைத்திருந்த 20 கிலோ கஞ்சா பறிமுதல்