×

ஆலாங்கடவு நரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கில் சிக்கிய மாடுகள் மீட்பு

பாலக்காடு: ஆலாங்கடவு நரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கில் சிக்கிய வளர்ப்பு மாடுகளை தீயணைப்புத்துறையினர் மீட்டு கரையேற்றினர். பாலக்காடு மாவட்டம், மூலத்தரை தடுப்பு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் மூலத்தரை, குன்னங்காட்டுப்பதி, ஆலாங்கடவு, நரணி, சித்தூர், பாலத்துள்ளி மற்றும் கொடும்பு, பாலக்காடு, யாக்கரை ஆறுகளில் மழை வெள்ளம் கரைப புரண்டு ஓடுகிறது. இந்நிலையில் சித்தூர் அருகே நரணி பகுதியை சேர்ந்தவர்கள் வளர்ப்பு மாடுகள், எருமைகளை ஆற்றின் கரையோர இடங்களில் மேய்ச்சலுக்கு விட்டுள்ளனர். இதில் சில மாடுகள் கரை பகுதியில் மேய்ந்துள்ளன. அவற்றில் சில வழக்கம்போல தண்ணீருக்குள் இறங்கியபோது, வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.

இந்நிலையில் ஆற்றின் குறுக்கே நடுப்பகுதியில் மாடுகள், எருமைகள் சிக்கிக்கொண்டன. இதனை பார்த்த கிராம மக்கள் சித்தூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவலளித்தனர். இதனைத்தொடர்ந்து விரைந்து வந்த சித்தூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் மற்றும் பொதுமக்கள் ஒன்றிணைந்து கயிறுகள் கட்டி ஆற்றின் குறுக்கே சிக்கிய எருமை மாடுகளை பல மணி நேரம் போராடி கரைக்கு கொண்டு வந்து உயிருடன் மீட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியினரிடம் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post ஆலாங்கடவு நரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கில் சிக்கிய மாடுகள் மீட்பு appeared first on Dinakaran.

Tags : Alankadu Narani river ,Palakkad ,Moolatharai ,dam ,Palakkad district ,Kunnankattupathi ,Alankadu ,Narani ,Chittoor ,Palathulli ,Kodumbu ,Yakkarai… ,Dinakaran ,
× RELATED நெல்லியாம்பதி மலைப்பாதையில்...