×

மார்கழி வந்தல்லோ… கலர் கோலப்பொடி விற்பனை ஜோரல்லோ

திருப்புத்தூர், டிச. 16: திருப்புத்தூரில் இன்று மார்கழி மாதப் பிறப்பையொட்டி கலர் கோலப்பொடியின் விற்பனை ஜோராக நடைபெறுகிறது. ஆண்டுதோறும் மார்கழி மாதம் முதல் நாளிலில் இருந்தே நகரம் மற்றும் கிராமங்களில் இளம்பெண்கள் முதல் வயதான பெண்கள் வரை அதிகாலையில் எழுந்து வாசலில் கோலம் போடுவதில் மிகவும் ஆர்வமாக ஈடுபடுவார்கள்.

இந்தாண்டு மார்கழி மாதம் இன்று பிறப்பதையொட்டி திருப்புத்தூரில் காந்திசிலைப் பகுதியில் 4 இடங்களுக்கும் மேலாக கலர் கோலப் பொடியின் விற்பனை துவங்கியுள்ளது. இதில் சுமார் 25க்கும் மேற்பட்ட கலர் கோலப்பொடிகள் விற்கப்படுகிறது. இதில் 100 மி.லி அளவு கொண்ட படி ரூ.10க்கும், 200 மி.லி அளவு கொண்ட படி ரூ.15க்கும், கால்படி ரூ.30க்கும், ஒரு படி ரூ.80க்கும் கலர் பொடி விற்கப்படுகிறது.

The post மார்கழி வந்தல்லோ… கலர் கோலப்பொடி விற்பனை ஜோரல்லோ appeared first on Dinakaran.

Tags : Tiruputtur ,Margazhi ,
× RELATED மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோயிலில் மார்கழி மாத சிறப்பு பூஜை