×

ஆர்கே பேட்டை அருகே புதிய அங்கன்வாடி கட்ட கோரிக்கை

ஆர்.கே.பேட்டை, டிச. 16: ஆர்கே பேட்டை அருகே புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்ட வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. ஆர்.கே.பேட்டை ஒன்றியம், மகான் காளிகாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பூசாலீயூர் கிராமத்தில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இதில் சுமார் 20 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.

இந்த அங்கன்வாடி கட்டிடத்தின் மேற்கூரை சிமென்ட் ஷீட்டால் மூடப்பட்டுள்ளது. இதனால் மழைக்காலங்களில் சிமென்ட் ஷீட் வழியாக வகுப்பறைக்குள் மழைநீர் ஒழுகுவதால் மாணவ மாணவிகள் அமர்ந்து படிக்க முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே அங்கன்வாடி குழந்தைகளின் கல்விக்காக இந்த பழைய கட்டிடத்தை இடித்து அகற்றிவிட்டு புதிதாக கட்டிடம் கட்டித் தர வேண்டும் என மாணவர்களின் பெற்றோர் மற்றும் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post ஆர்கே பேட்டை அருகே புதிய அங்கன்வாடி கட்ட கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Anganwadi ,RK Pettai ,R.K. Pettai ,Poosaleeyur ,RK Pettai Union ,Mahan Kalikapuram Panchayat ,Dinakaran ,
× RELATED ஆர்.கே.பேட்டை சமத்துவபுரத்தில் புதர்மண்டிய அங்கன்வாடி மையம் சீரமைப்பு