×

ஆன்லைன் உணவு டெலிவரி பெண் ஊழியரிடம் அத்துமீறல்: 2 வாலிபர்கள் கைது

பெரம்பூர்: வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் கலா (34, பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர், பிரபல ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில், நேற்று மாலை கொளத்தூர் சிவசக்தி நகர் 3வது தெருவில், உணவு டெலிவரி செய்வதற்காக கலா சென்றுள்ளார்.

அப்போது, உணவு ஆர்டர் செய்திருந்த 2 பேர், உங்களது வாய்ஸ் மிகவும் கவர்ச்சியாக உள்ளது, என்று கூறி அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர். உடனே, அங்கிருந்து வெளியேறிய கலா, அருகில் ரோந்து பணியில் ஈடுபட்ட உதவி ஆய்வாளர் முரளி மனோகர் என்பவரிடம் நடந்ததை கூறியுள்ளார். உணவு டெலிவரி செய்யப்பட்ட செல்போன் எண்ணை தொடர்புகொண்டு உதவி ஆய்வாளர் பேசிய போது, கலாவிடம் தவறான முறையில் பேசிய அதே நபர்கள் உதவி ஆய்வாளரையும் தகாத வார்த்தைகளால் அசிங்கமாக திட்டி உள்ளனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த உதவி ஆய்வாளர் இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். கலாவும், ராஜமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், இன்ஸ்பெக்டர் மூர்த்தி தலைமையிலான போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து கொளத்தூர் சிவசக்தி நகரை சேர்ந்த மனு கிருஷ்ணா (28), விஷ்ணு (26) ஆகிய இருவரை கைது செய்தனர். பின்னர், அவர்களை நீதிமன்றத்தில் அஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post ஆன்லைன் உணவு டெலிவரி பெண் ஊழியரிடம் அத்துமீறல்: 2 வாலிபர்கள் கைது appeared first on Dinakaran.

Tags : Perambur ,Kala ,Villivakkam ,3rd Street, Sivasakthi Nagar, Kolathur ,
× RELATED தமிழை விமர்சனம் செய்தாரா? சங்கீதாவை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்