×

திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழா அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு திருக்குறள் வினாடி வினா போட்டி

சென்னை: திருவள்ளுவர் சிலையின் வெள்ளிவிழாவை முன்னிட்டு தமிழ்வளர்ச்சித் துறையின் சார்பில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான மாநில அளவிலான திருக்குறள் வினாடி வினா போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நிகழ்ச்சிக்கான மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெயசீலன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

குமரிமுனையில் வானுயர்ந்து நிற்கும் அய்யன் திருவள்ளுவர் சிலையின் வெள்ளி விழாவை முன்னிட்டு, மாநில அளவிலான திருக்குறள் வினாடி வினாப் போட்டியானது தமிழ் வார்ச்சித் துறையின் சார்பில், விருதுநகர் மாவட்ட நிர்வாக ஒருங்கிணைப்பில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்காக நடத்தப்படுகிறது.

அதன்படி மாநில அளவிலான திருக்குறள் வினாடி வினாப் போட்டியின் முதல்நிலை போட்டியானது ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொள்ளும் வகையில் அந்தந்த மாவட்டங்களில் வரும் டிச.21ம் தேதி சனிக்கிழமை அன்று நடைபெறும்.

மேலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் 3 குழுக்கள் தேர்வு செய்யப்பட்டு 38 மாவட்டங்களைச் சேர்ந்த குழுக்கள் கலந்து கொள்ளும் இறுதி போட்டியானது விருதுநகரில் டிச.28ம் தேதி நடைபெறும். மேலும் விபரங்களுக்கு 93616 13548 மற்றும் 86675 73086 என்ற என்களை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழா அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு திருக்குறள் வினாடி வினா போட்டி appeared first on Dinakaran.

Tags : Thiruvalluvar Statue Silver Jubilee Thirukkural Quiz Competition for Government Employees and Teachers ,Chennai ,Thiruvalluvar Statue ,Thirukkural Quiz Competition ,Tamil Development Department ,Jayaseelan ,Kumarimunai… ,
× RELATED அரசு ஊழியர்களுக்கு திருக்குறள் போட்டி