- அத்வானி
- தில்லி
- புது தில்லி
- பாஜக
- முன்னாள்
- துணை
- எல். கே. அட்வானி
- அப்பல்லோ மருத்துவமனை
- தில்லி. ...
- தின மலர்
புதுடெல்லி: டெல்லி தனியார் மருத்துவமனையின் ஐசியூ பிரிவில் பாஜக மூத்த தலைவர் அத்வானி அனுமதிக்கப்பட்டு, சிகிச்சையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் துணைப் பிரதமரும், பாஜக மூத்த தலைவருமான எல்.கே. அத்வானி (94) டெல்லியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் தற்போது மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் உள்ளார்.
அவரது உடல்நிலை சீராக இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த இரண்டு வாரங்களாக அவர் உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால், அவர் இந்திரபிரஸ்தா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், ‘எல்.கே.அத்வானி மருத்துவ பரிசோதனைக்காக இந்திரபிரஸ்தா அப்பல்லோ மருத்துவமனையின் ஐசியூ பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் தற்ேபாது மூத்த நரம்பியல் நிபுணர் வினீத் சூரி தலைமையிலான குழுவின் கண்காணிப்பில் உள்ளார். தற்போது அத்வானியின் உடல்நிலை சீராக உள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post டெல்லி மருத்துவமனையின் ஐசியூ-வில் அத்வானி appeared first on Dinakaran.