×

தெலங்கானாவில் கைது செய்யப்பட்ட நடிகர் அல்லு அர்ஜுனுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்: நாம்பள்ளி நீதிமன்றம் உத்தரவு

ஹைதரபாத்: நடிகர் அல்லு அர்ஜூனை ஹைதராபாத் போலீசார் இன்று திடீரென்று கைது செய்த நிலையில் அவரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. நடிகர் அல்லு அர்ஜூன், நடிகை ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகி உள்ள திரைப்படம் புஷ்பா 2. இந்த திரைப்படம் கடந்த 5ம் தேதி வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது வரை ரூ.1000 கோடிக்கு அதிகமாக வசூல் செய்துள்ளது. நடிகர் அல்லு அர்ஜுனுக்கு மிகப்பெரிய ஹிட் அடித்துள்ள இந்த திரைப்படம் தொடர்ந்து திரையரங்குகளில் ஓடிவ வருகிறது. இதற்கிடையே தான் அல்லு அர்ஜுன் இன்று அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

அதாவது கடந்த 5ம் தேதி ‘புஷ்பா 2’ திரைப்படம் வெளியானது. ஆனால் அதற்கு முந்தைய நாளான டிசம்பர் 4ம் தேதி படத்தின் பிரீமியர் காட்சி ஹைதராபாத்தில் உள்ள சந்தியா தியேட்டரில் திரையிடப்பட்டது. இதனை பார்க்க நடிகர் அல்லு அர்ஜுன் சென்றார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் ரேவதி என்ற பெண் இறந்தார். இதுதொடர்பாக தியேட்டர் உரிமையாளர், மேலாளர் மீது சிக்கடபள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். அல்லு அர்ஜுன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் அவர் இன்று கைது செய்யப்பட்டார். மருத்துவ பரிசோதனைக்கு பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட அல்லு அர்ஜுனை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதன்மூலம் அல்லு அர்ஜுன் சிறையில் அடைக்கப்பட உள்ளார்.

The post தெலங்கானாவில் கைது செய்யப்பட்ட நடிகர் அல்லு அர்ஜுனுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்: நாம்பள்ளி நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Allu Arjun ,Telangana ,HYDERABAD ,HYDERABAD POLICE ,Rashmika Mandana ,Nampalli ,
× RELATED 14 மணி நேரத்துக்கு பிறகு சிறையில் இருந்து அல்லு அர்ஜுன் விடுதலை