×

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து முதற்கட்டமாக 1,000 கனஅடி நீர் திறப்பு: கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

சென்னை: செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து முதற்கட்டமாக 1,000 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதனால் சென்னை, காஞ்சிபுரம் திருவள்ளூர் செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அந்த வகையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு தொடங்கிய மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால், ஏரிகளுக்கு நீர்வரத்து வந்த வண்ணம் உள்ளன. இதேபோல், தொடர் மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.

நேற்று காலை நீர்வரத்து 743 கனஅடியாக இருந்த நிலையில், தொடர்ந்து அதிக மழை பெய்ததால் தற்போது விநாடிக்கு 6998 கனஅடி நீர் வந்துகொண்டிருக்கிறது. மாலைஇதன் காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 22 அடியை நெருங்கிக் கொண்டிருக்கிறது. தொடர்ந்து ஏரிக்கு வரும் நீரின் அளவை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரிநீரை திறக்கப்பட்டுள்ளது.

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து முதற்கட்டமாக 1,000 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக 5 கண் மதகில் 2 மற்றும் 4வது ஷட்டர்களில் நீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் குன்றத்தூர், காவனூர், சிறுகளத்தூர், திருமுடிவாக்கம்,திருநீர்மலை, வழுதியம்பேடு உள்ளிட்ட கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

The post செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து முதற்கட்டமாக 1,000 கனஅடி நீர் திறப்பு: கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Lake Serrambakkam ,Chennai ,Crembarbakkam Lake ,Tamil Nadu ,Meteorological Centre ,Kanchipuram ,Thiruvallur Chengalpattu ,Lake Serrambakam ,
× RELATED செம்பரம்பாக்கம் ஏரியில் உபரிநீர் திறப்பு நிறுத்தம்