×

நாகப்பட்டினம் நகர் பகுதியில் மழையால் தண்ணீர் தேங்கிய பகுதிகள்

 

நாகப்பட்டினம்,டிச.13: நாகப்பட்டினம் நகர பகுதியில் கனமழையால் தண்ணீர் தேங்கிய பகுதிகளை நகர்மன்ற தலைவர் மாரிமுத்து ஆய்வு செய்தார்.நாகப்பட்டினம் மாவட்டத்தில் தொடர்ந்து இரண்டு நாட்கள் பெய்த மழையில் நாகப்பட்டினம் நகராட்டி வார்டு எண் 23க்கு உட்பட்ட நாகதோப்பு பகுதியில் மழை நீர் வடியாமல் தேங்கியது. இதையடுத்து நகர்மன்ற தலைவர் மாரிமுத்து, நகராட்சி ஆணையர் லீனாசைமன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு நடத்தினர். இதை தொடர்ந்து புல்டோசர் உதவியுடன் வடிகால்களை சீர் செய்து மழை நீரை வடிவைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

The post நாகப்பட்டினம் நகர் பகுதியில் மழையால் தண்ணீர் தேங்கிய பகுதிகள் appeared first on Dinakaran.

Tags : Nagapattinam ,City Council ,Chairman Marimuthu ,Nagathopu ,Dinakaran ,
× RELATED வேதாரண்யம் நகராட்சி பகுதியில்...