×

கார்த்திகை தீபத்தை முன்னிட்டு கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்வு: காய்கறிகள் விலை பாதியாக குறைந்தது

சென்னை: கார்த்திகை தீபத்தை முன்னிட்டு கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்ந்துள்ளது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் நேற்று ஒரு கிலோ மல்லி ரூ.600 இருந்து ரூ.700க்கும், ஐஸ் மல்லி ரூ.500லிருந்து ரூ.600க்கும், முல்லை ரூ.200லிருந்து ரூ.300க்கும், ஜாதி மல்லி ரூ.150லிருந்து ரூ.200க்கும், கனகாம்பரம் ரூ.400லிருந்து ரூ.500க்கும், அரளி பூ ரூ.400லிருந்து ரூ.600க்கும் சாமந்தி ரூ.120லிருந்து ரூ.160க்கும், சம்பங்கி ரூ.130லிருந்து ரூ.150க்கும் சாக்லேட் ரோஸ் ரூ.220லிருந்து ரூ.240க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதுகுறித்து பூ மார்க்கெட் துணை தலைவர் முத்துராஜ் கூறுகையில், கார்த்திகை தீபத்தை முன்னிட்டு பூக்களின் விலை மேலும் உயரும் என்று எதிர்பார்த்த நிலையில் கனமழையால் வியாபாரிகள் வருகை குறைந்தது. இதனால் பூக்களின் விலை சற்று உயர்ந்துள்ளது என்றார். அதேபோல வரத்து அதிகரிப்பால் கோயம்பேடு மார்கெட்டில் காய்கறிகள் விலை பாதியாக குறைந்தது. கோயம்பேடு மார்க்கெட்டுக்கு ஆந்திரா, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் தமிழ்நாடு ஆகிய பகுதிகளில் இருந்து அனைத்து காய்கறிகளும் வருகிறது. வழக்கமாக தினசரி 650 வாகனங்களில் இருந்து 7 ஆயிரம் டன் காய்கறிகள் வருகிறது.

நேற்று காலை 700 வாகனங்களில் 7 ஆயிரம் டன் காய்கறிகள் வந்து குவிந்துள்ளன. இதன்காரணமாக ஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூ.90 இருந்து ரூ.40 க்கும் சின்ன வெங்காயம் ரூ.90 இருந்து ரூ.50 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தக்காளி ரூ.50லிருந்து ரூ.20க்கும் கேரட் ரூ.80 லிருந்து ரூ.40 க்கும் முருங்கைக்காய் ரூ.400 லிருந்து ரூ.200 க்கும் இஞ்சி ரூ.200 லிருந்து ரூ.50 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதுதவிர, ஒரு கிலோ உருளைகிழங்கு, கத்திரிக்காய், காலிபிளவர், கோவக்காய் ஆகியவை ரூ.35க்கும் பீன்ஸ், புடலங்காய், சேமகிழங்கு, பீர்க்கங்காய் மற்றும் எலுமிச்சை பழம் ரூ.50க்கும், பீட்ரூட் ரூ.80க்கும் முள்ளங்கி, வெண்டைக்காய் மற்றும் வெள்ளரிக்காய் ரூ.40க்கும் சுரக்காய் ரூ.45க்கும் சேனைக்கிழங்கு ரூ.55க்கும், பச்சை மிளகாய் ரூ.30க்கும், பட்டாணி ரூ.80க்கும், அவரைக்காய் ரூ.60க்கும், நூக்கல் ரூ.30க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

The post கார்த்திகை தீபத்தை முன்னிட்டு கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்வு: காய்கறிகள் விலை பாதியாக குறைந்தது appeared first on Dinakaran.

Tags : Coimbed market ,Karthigai Deepa ,Chennai ,Coimbed ,Market ,Karthighai Deepa ,
× RELATED கார்த்திகை தீபத்தை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு 75 சிறப்பு பஸ்கள் இயக்கம்