×

அரசு மருத்துவமனைக்கு மருத்துவர் நியமனம் கோரி கலெக்டரிடம் மனு

சிவகங்கை, டிச.11: மானாமதுரை அரசு மருத்துவமனைக்கு கூடுதல் மருத்துவர்களை பணி நியமனம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மானாமதுரை ஒன்றிய செயலாளர் முனிராஜ் மற்றும் நிர்வாகிகள் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: மானாமதுரை நகரில் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இப்பகுதியில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் தினமும் சுமார் 300க்கும் மேற்பட்டோர் இங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த மருத்துவமனையில் 11 மருத்துவர்கள் பணியில் இருக்க வேண்டும். ஆனால் மிகக்குறைவான எண்ணிக்கையிலேயே மருத்துவர்கள் உள்ளனர். இதனால் சிகிச்சை வரும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இரவு நேரங்களில் சிகிச்சை அளிப்பதில் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே போதிய மருத்துவர்கள் நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post அரசு மருத்துவமனைக்கு மருத்துவர் நியமனம் கோரி கலெக்டரிடம் மனு appeared first on Dinakaran.

Tags : Hospital ,Sivagangai ,Sivagangai Collector ,Manamadurai Government Hospital ,Communist Party ,Manamadurai ,Muniraj ,Dinakaran ,
× RELATED நாளை படைவீரர் குறைதீர் கூட்டம்