×

பலாத்கார காட்சிகள் அடங்கிய மெமரி கார்டை திறந்து பார்த்தவர்கள் மீது நடவடிக்கை: ஜனாதிபதிக்கு மலையாள நடிகை கடிதம்

திருவனந்தபுரம்: மலையாள சினிமாவில் முன்னணி நடிகையான ஒருவர் கடந்த 7 வருடங்களுக்கு முன் திருச்சூரிலிருந்து கொச்சிக்கு காரில் செல்லும் வழியில் ஒரு கும்பலால் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இது தொடர்பாக அந்த நடிகையிடம் கார் டிரைவராக பணிபுரிந்த சுனில்குமார் என்பவர் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் நடிகையை பலாத்காரம் செய்வதற்கு சதித்திட்டம் தீட்டியது பிரபல மலையாள முன்னணி நடிகரான திலீப் என தெரியவந்தது.

கைது செய்யப்பட்ட கும்பலிடமிருந்து பலாத்கார காட்சிகள் அடங்கிய மெமரி கார்டை போலீசார் கைப்பற்றினர். நீதிமன்றத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த மெமரி கார்டை யாரோ திறந்து பார்த்துள்ளனர். இந்நிலையில் ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு பாதிக்கப்பட்ட நடிகை ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அதில் மெமரி கார்டை யாரோ திறந்து பார்த்தவர்கள் மீது நீதிமன்றங்கள் நடவடிக்கை எடுக்காததால் நீங்கள் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க நீதிமன்றத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியுள்ளார்.

The post பலாத்கார காட்சிகள் அடங்கிய மெமரி கார்டை திறந்து பார்த்தவர்கள் மீது நடவடிக்கை: ஜனாதிபதிக்கு மலையாள நடிகை கடிதம் appeared first on Dinakaran.

Tags : President ,Thiruvananthapuram ,Thrissur ,Kochi ,Sunil Kumar ,
× RELATED பலாத்கார வழக்கு திறந்த நீதிமன்றத்தில் விசாரணை கோரிய நடிகை மனு தள்ளுபடி