×

ஆலப்புழா அருகே காவலில் எடுத்த நபரை நிர்வாணமாக்கி சித்திரவதை: டிஎஸ்பி, மாஜி எஸ்ஐக்கு 1 மாதம் சிறை, ரூ.1000 அபராதம்

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் ஆலப்புழா அருகே பள்ளிப்புரம் பகுதியை சேர்ந்தவர் சித்தார்த்தன் கடந்த 2006ம் ஆண்டு வழக்கு ஒன்றில் கைது செய்த சேர்த்தலா போலீசார் கைது செய்தனர். அப்போது அவரை போலீசார் நிர்வாணமாக்கி அடித்து சித்திரவதை செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சித்தார்த்தன் சேர்த்தலா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் புகார் கொடுத்தார். இது தொடர்பான விசாரணை கடந்த 18 வருடங்களாக நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

மதுபாபு, மோகனனுக்கு ஒரு மாதம் சிறையும், ரூ.1000 அபராதமும் விதித்து மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். அபராதத்தை கட்ட தவறினால் மேலும் 1 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறி இருந்தார். அப்போது எஸ்ஐயாக இருந்த மதுபாபு தற்போது ஆலப்புழா டிஎஸ்பியாக உள்ளார். உதவி எஸ்ஐ மோகனன் பணியில் இருந்து ஓய்வு பெற்று விட்டார். மேல் நீதிமன்றத்தில் அப்பீல் செய்வதற்காக 2 பேருக்கும் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உள்ளது.

The post ஆலப்புழா அருகே காவலில் எடுத்த நபரை நிர்வாணமாக்கி சித்திரவதை: டிஎஸ்பி, மாஜி எஸ்ஐக்கு 1 மாதம் சிறை, ரூ.1000 அபராதம் appeared first on Dinakaran.

Tags : Alappuzha ,Thiruvananthapuram ,Siddharthan ,Pallipuram ,Kerala ,Kerala police ,Siddharth ,
× RELATED கேரளாவில் மரபணு குறைபாட்டுடன்...