திருவாரூர், டிச. 10: திருவாரூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் திங்கட்கிழமை தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று கலெக்டர் சாரு தலைமையில் நடைபெற்றது. இதில் பொது மக்கள் பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, ஆக்கிரமிப்பு அகற்றுதல், கல்விக்கடன், வீட்டுமனைப்பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்த 381 மனுக்களை கலெக்டரிடம் அளித்தனர். பொது மக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை வழங்கி குறித்த காலத்திற்குள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.
மேலும் வழக்கம்போல் தரைதளத்தில் மாற்றுதிறனாளிகளிடம் அவர்களது கோரிக்கை மனுக்களை பெற்றுகொண்டார். இக்கூட்டத்தில், மாற்றுதிறனாளிகள் நலத்துறை சார்பில் 5 பேர்களுக்கு தக்க செயல்திறன் உடைய கைப்பேசி திட்டத்தின் கீழ் ரூ. 80 ஆயிரத்து 995 மதிப்பில் கைபேசிகளையும் கலெக்டர் சாரு வழங்கினார். கூட்டத்தில் டிஆர்ஒ சண்முகநாதன், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் புவனா உட்பட பலர் கலந்துகொண்டனர்.
The post திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்நாள் கூட்டம் appeared first on Dinakaran.