×

இன்ஸ்டாகிராம் மோகத்தால் சீரழிவு: 13 வயது சிறுமியை கடத்தி கூட்டு பலாத்காரம் செய்த கும்பல்: காதலன் உட்பட 5 பேர் கைது

பரமத்திவேலூர்: நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் தாலுகாவை சேர்ந்த 9ம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமி, கடந்த அக்டோபர் மாதம் பள்ளிக்கு செல்வதாக பெற்றோரிடம் கூறி விட்டு சென்றார். பின்னர் வீடு திரும்பவில்லை. புகாரின்படி ஜேடர்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். அந்த மாணவிக்கு இன்ஸ்டாகிராமில், திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த ஒரு வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டு காதலித்துள்ளனர்.

சம்பவத்தன்று தாயின் செல்போனை எடுத்துச் சென்றிருந்தார். அதை வைத்து போலீசார் டிரேஸ் செய்ததில், திருவண்ணாமலையில் இருப்பது தெரியவந்தது. அங்கு சென்று அவரை மீட்டனர். அப்போது, சிறுமியை 5 பேர் கூட்டு பலாத்காரம் செய்த அதிர்ச்சி தகவல் தெரிய வந்தது. இன்ஸ்டாகிராமில் ஏற்பட்ட பழக்கத்தில், அந்த வாலிபர் தன்னை பார்ப்பதற்காக, சிறுமியை திருவண்ணாமலைக்கு வரவழைத்துள்ளார்.

பின்னர், சிறுமியை நண்பர்கள் 4 பேருடன் சேர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதையடுத்து சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த, விக்னேஷ் (26), சஞ்சய் (20), ஆகாஷ் (22), இளங்கோவன் (30), செல்வகுமார் (19) ஆகிய 5 பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்தனர்.

The post இன்ஸ்டாகிராம் மோகத்தால் சீரழிவு: 13 வயது சிறுமியை கடத்தி கூட்டு பலாத்காரம் செய்த கும்பல்: காதலன் உட்பட 5 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Instagram ,Paramathivelur ,Namakkal district ,Paramathivelur Taluga ,Zedarpalayam police ,
× RELATED 15வயது சிறுமியை கடத்தி பாலியல்...