சென்னை: அமைதி, வெற்றிகள் நிறைந்த நல்ல உடல் ஆரோக்கியத்துடன் சோனியா காந்தி நீண்டநாள் வாழ வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் மருமகளும், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் மனைவியுமான சோனியா காந்தியின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. காங்கிரஸ் கட்சியை சிறப்பாக வழிநடத்திய பெண் ஆளுமைகளில் சோனியா காந்தி முக்கியமானவர். இவரது பிறந்தநாளான இன்று பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பிறந்தநாள் வாழ்த்துச் செய்தியில், காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சித் தலைவர் சோனியா காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். வலிமையான சவால்களை வழிநடத்துவது முதல் கருணையுடன் வழிநடத்துவது வரை, அவரது பயணம் பின்னடைவு மற்றும் அர்ப்பணிப்புக்கு ஒரு சான்றாக நிற்கிறது. அவர் வெற்றியும் அமைதியும் நிறைந்த நீண்ட, ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்த்துகிறேன். இவ்வாறு வாழ்த்து தெரிவித்தார்.
The post அமைதி, வெற்றிகள் நிறைந்த நல்ல உடல் ஆரோக்கியத்துடன் நீண்டநாள் வாழ வேண்டும்: சோனியா காந்திக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து..!! appeared first on Dinakaran.