- ராமநாதபுரம்
- இராமநாதபுரம் II
- உவல்பட்டினம்
- ராமேஸ்வரம்
- அபிராமம்
- போகலூர்
- கடலி
- Kamudi
- கீசலக்கரை
- முதுகுளத்தூர்
- பெருநாழி
- RSMangalam
- சாயல்குடி
ராமநாதபுரம், டிச.9:ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமநாதபுரம், ராமநாதபுரம் II, வெளிப்பட்டினம், ராமேஸ்வரம், அபிராமம், போகலூர், கடலாடி, கமுதி, கீழக்கரை, முதுகுளத்தூர், பெருநாழி, ஆர்.எஸ்.மங்கலம், சாயல்குடி ஆகிய இடங்களில் பத்திரப்பதிவு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. இதில் கிரையம், இனாம் செட்டில் மெண்ட், உயில், பவர் அதிகாரம், கடன், பாகப்பிரிவினை என தினந்தோறும் 250 பத்திரங்கள் வரையிலும் பதியப்படுகின்றன.
மேலும் திருமணப் பதிவுகள், வில்லங்கச் சான்றிதழ், பத்திரநகல் பெறுதல் என இதர சேவைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. இந்நிலையில் மனுதாரர் ஒருவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் ராமநாதபுரம் மாவட்ட பத்திரப்பதிவு அலுவலகங்கள் குறித்து பல்வேறு தகவல்களை கேட்டார். இதற்கு ராமநாதபுரம் மாவட்ட பதிவாளர் அளித்த பதில் விவரம் வருமாறு, கடந்த 3 வருடத்தில் மோசடி பத்திர பதிவு நடைபெற்றதாக 1164 புகார் மனுக்கள் பெறப்பட்டு, 193 மனுக்களுக்கு நடவடிக்கை எடுத்து முடித்து வைக்கப்பட்டுள்ளது.
நில அபகரிப்பு வழக்குகளை விசாரித்திட கொண்டு வரப்பட்ட பதிவுச்சட்டம் பிரிவு 77(A), 77(B) மற்றும் 68(2) ஆகியவை \”அரசியலமைப்பிற்கு எதிரானது\” என சென்னை உயர்நீதிமன்றம் 2.8.2024 அன்று தீர்ப்பாணை வழங்கியுள்ள நிலையில், மோசடி ஆவணப்பதிவுகள் தொடர்பான புகார் மனுக்கள் மீது மாவட்டப் பதிவாளர்கள் எவ்வித விசாரணையும், நடவடிக்கையும் விசாரணையும் மேற்கொள்ள இயலாத நிலையில் உள்ளது, என விவரம் தெரிவிக்கப்படுகிறது என கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது.
The post பத்திரப்பதிவில் 1164 புகார்களில் 193 மனுக்கள் மீது நடவடிக்கை appeared first on Dinakaran.