×

வினாதாள்களை சரி பார்த்து மாணவர்களுக்கு வழங்க உத்தரவு

 

ராமநாதபுரம், டிச.13: ராமநாதபுரம் மாவட்டத்தில் நடந்து வரும் அரையாண்டு தேர்வில் வினாத்தாள்களை ஆசிரியர்கள் சரிபார்த்த பிறகு மாணவர்களுக்கு வழங்க மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சின்னராசு தெரிவித்துள்ளார். டிச.9ம் தேதி முதல் பள்ளிகளில் அரையாண்டு தேர்வு நடந்து வருகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் நடந்த பிளஸ்1, பிளஸ் 2 தமிழ்பாட கேள்விதாளில் ஒரு சில கேள்விகளில் ஒரு சில எழுத்துப்பிழைகள் இருந்தது. இதனை கவனித்த ஆசிரியர்கள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சின்னராசு செய்தியாளர்களிடம் கூறும்போது, பிளஸ் 1, பிளஸ் 2 அரையாண்டு தேர்வு தமிழ் பாட வினாத்தாளில் பிழைகள் இருந்தது தெரியவந்தது. இது குறித்து விசாரணை நடந்து வருகிறது. பிழைகள் இருந்த அந்த குறிப்பிட்ட வினாக்களுக்கு பதில் அளிக்க முயன்ற மாணவர்களுக்கு முழு மதிப்பெண் வழங்க தலைமையாசிரியர்கள் மூலம் தமிழாசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இனி நடக்கும் தேர்வுகளில், தேர்வு நடப்பதற்கு சில மணி நேரத்திற்கு முன்பாக வினாத்தாள்களை உரிய பாட ஆசிரியர்கள் சரிபார்த்த பிறகே மாணவர்களுக்கு வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.

The post வினாதாள்களை சரி பார்த்து மாணவர்களுக்கு வழங்க உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Ramanathapuram ,Principal Education Officer ,Chinnarasu ,Ramanathapuram… ,Dinakaran ,
× RELATED ராமநாதபுரம் மாவட்டதிற்கு 2025 ஜன.13ம் தேதி உள்ளூர் விடுமுறை