×

தேனிமலை முருகன் கோயிலை சுற்றுலா தலமாக அறிவித்து அடிப்படை வசதி செய்ய வேண்டும்

 

பொன்னமராவதி, டிச.9: புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே தேனிமலை முருகன் கோயிலை சுற்றுலா தளமாக அறிவித்து அடிப்படை நவீன வசதிகள் செய்யவேண்டும் என பக்தர்கள் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே தேனிமலையில் பிரசித்தி பெற்ற விளங்கும் முருகன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் திரு கார்த்திகை, தைப்பூசம், பங்குனி உத்திரம் மற்றும் விசேஷ நாட்கள் செவ்வாய், வெள்ளிகிழமைகள் என பக்தர்கள் வழிபாடு செய்து வருகின்றனர். ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி வழிபாடு நடைபெற்று வருகின்றது.

இந்த வழியாக அதிக பேரூந்துகள் இயக்கவேண்டும் கோயிலின் தெற்குப்பகுதி பொன்னமராவதி-புதுக்கோட்டை சாலை, கிழக்குப்பகுதி கருகப்புலாம்பட்டி சாலை நல்ல முறையில் உள்ளது. ஆனால் வடக்கு மற்றும் மேற்குப்புற சாலைகள் ஜல்லிகள் பெயர்ந்தும் குண்டும் குழியுமாக பக்தர்கள் கிரிவலம் நடந்து செல்ல முடியாத அறவிற்கு உள்ளது. எனவே தேனிமலை முருகன் கோயிலை சுற்றுலாதலமாக அறிவித்து நவீன வசதிகள் மற்றும் கிரிவலப்பாதையினை சீர் செய்து புதிதாக தரமான சாலை அமைக்கவேண்டும் என பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post தேனிமலை முருகன் கோயிலை சுற்றுலா தலமாக அறிவித்து அடிப்படை வசதி செய்ய வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Thenimalai Murugan Temple ,Ponnamaravati ,Pudukottai district ,Ponnamaravathi ,
× RELATED பொன்னமராவதி அருகே அரசு பேருந்தின் பின்பக்க டயர் வெடித்து 2 பேர் காயம்