- Ponnamaravati
- புதுக்கோட்டை மாவட்டம்
- சடையம்பட்டி
- கொப்பனப்பட்டி
- அலவயல்
- நகரப்பட்டி
- பாலக்குறிச்சி
- தின மலர்
பொன்னமராவதி, டிச.5: பொன்னமராவதி அருகே அரசு டவுன் பஸ்ஸின் பின்பக்க டயர் வெடித்ததில் பயணிகள் 2 பேர் காயமடைந்தனர். புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியில் இருந்து கொப்பனாபட்டி, ஆலவயல், நகரப்பட்டி, பாலகுறிச்சி, வழியாக சடையம்பட்டிக்கு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் நகரப்பேருந்து தடம் எண் 2 இயக்கப்படுகிறது. இந்த டவுன் பஸ் நேற்று காலை சடையம்பட்டி சென்று விட்டு காலை 10 மணியளவில் கொப்பனாபட்டி – பொன்னமராவதி ரோட்டில் சென்று கொண்டிருந்தது. அப்போது பேருந்தின் பின்பக்க டயர் திடீரென வெடித்ததில் பஸ்சினுள் அமர்ந்திருந்த திருச்சி மாவட்டம் சுப்புராயபட்டியை சேர்ந்த நாகம்மாள் (45) என்பவருக்கு கால் முறிவு ஏற்பட்டது.
அதேபோல அவரது மகன் கருப்பசாமி என்பவருக்கு காலில் காயம் ஏற்பட்டது. இவர்கள் பொன்னமராவதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து நாகம்மாள் மருமகள் நாச்சம்மை கூறும்போது, எனது 3 மாத குழந்தையை உடல்நிலை சரியில்லாததால் ஆஸ்பத்திரியில் சென்று கொண்டிருந்த நிலையில் பஸ்சின் டயர் வெடித்தது. இதில் எனது மகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார் என்று கூறினார். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
The post பொன்னமராவதி அருகே அரசு பேருந்தின் பின்பக்க டயர் வெடித்து 2 பேர் காயம் appeared first on Dinakaran.