×

ரசாயனம் கலந்த நீரை கொடுத்து 12 பேரை கொலை செய்த மந்திரவாதி: போலீஸ் காவலில் திடீரென இறந்ததால் பரபரப்பு

அகமதாபாத்: குஜராத் மாநிலம் சுரேந்திர நகர் மாவட்டம் வாத்வான் என்ற பகுதியில் ஆசிரமம் நடத்தி வந்தவர் மந்திரவாதி நவல்சிங் சாவ்தா(42). தன்னை புவாஜி என அழைத்து கொண்ட இவர், தனக்கு மந்திரம், அற்புதங்களை செய்யும் ஆற்றல் இருப்பதாகவும், தன்னிடம் வருபவர்களின் செல்வத்தை பெருக்குவதாக, பிரச்னைகளை தீர்ப்பதாகவும் கூறி வந்துள்ளார். அகமதாபாத்தை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கடந்த 3ம் தேதி நவல்சிங் சாவ்தாவை காவல்துறையினர் கைது செய்தனர். நேற்று காலை உடல்நலம் பாதிக்கப்பட்ட சாவ்தாவை மருத்துவமனைக்கு காவல்துறையினர் அழைத்து சென்றனர்.

ஆனால் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இறப்பதற்கு முன் நவல்சிங் சாவ்தாவிடம் நடத்திய விசாரணையில் ரசாயனம் கலந்த நீரை கொடுத்து 12 பேரை கொலை செய்ததை சாவ்தா ஒத்து கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இதுகுறித்து காவல்துறை துணை ஆணையர் மேலும் கூறியதாவது, “உயிரிழந்த சாவ்தா, மற்றொரு மந்திரவாதியிடம் இருந்து ரசாயனம் கலந்த நீர் பற்றி தெரிந்து கொண்டார். சோடியம் நைட்ரேட் ரசாயனத்தை வாங்கி உள்ளார். இந்த ரசாயனம் பருகிய 15 முதல் 20 நிமிட இடைவௌியில் செயல்பட தொடங்கி மாரடைப்பை உண்டாக்கி மரணத்தை ஏற்படுத்தும்.

தன்னிடம் வருபவர்களுக்காக அமானுஷ்ய சடங்குகள் செய்யும்போது சோடியம் நைட்ரேட் கலந்த நீரை பருக தந்து அவர்களை கொலை செய்துள்ளார். அதன்படி அகமதாபாத்தில் ஒருவர், சுரேந்திர நகரில் தன் குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் உள்பட ஆறு பேர், ராஜ்கோட்டில் மூன்று பேர், மோர்பி மாவட்டம் வான்கனேரில் ஒருவர் மற்றும் கட்ச் மாவட்டம் அஞ்சரில் ஒருவர் என மொத்தம் 12 பேரை கொலை செய்துள்ளார். சாவ்தா 14 ஆண்டுகளுக்கு முன் தன் பாட்டி, ஒரு வருடத்துக்கு முன் தன் தாய், மாமா ஆகியோரையும் கொலை செய்துள்ளார்” என்றார்.

The post ரசாயனம் கலந்த நீரை கொடுத்து 12 பேரை கொலை செய்த மந்திரவாதி: போலீஸ் காவலில் திடீரென இறந்ததால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : AHMEDABAD ,Mage Nawalsingh Sawda ,Wadwan ,Surendra Nagar district of ,Gujarat ,Puaji ,
× RELATED திருமணமான 4 நாட்களில் நடந்த கொடூரம்:...