- சதுரங்க சாம்பியன்ஷிப்
- குகேஷ்
- லிரன்
- சிங்கப்பூர்
- உலக செஸ் சாம்பியன்ஷிப்
- சீனா
- டிங் லிரென்
- இந்தியன் கிராண்ட் மாஸ்டர்
- குகேஷ்
- தின மலர்
சிங்கப்பூர்: உலக செஸ் சாம்பியனான சீனாவின் டிங் லிரென் – இந்திய கிராண்ட் மாஸ்டர் குகேஷ் இடையே சிங்கப்பூரில் நடந்து வரும் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் 10வது ரவுண்டு போட்டியும் டிராவில் முடிந்தது. தற்போதைய உலக செஸ் சாம்பியனாக சீனாவின் கிராண்ட் மாஸ்டர் டிங் லிரென் உள்ளார். இவருக்கும் இந்தியாவின் குகேசுக்கும் இடையே, சிங்கப்பூரில் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் 14 ரவுண்டுகளாக நடந்து வருகின்றன. ஏற்கனவே முடிந்துள்ள 9 ரவுண்டுகளில் இருவரும் தலா ஒரு வெற்றி பெற்றனர்.
மீதமுள்ள 7 ரவுண்டுகள் டிராவில் முடிந்தன. இதனால், இருவரும் தலா 4.5 புள்ளிகளுடன் சமநிலையில் இருந்தனர். இந்நிலையில் நேற்று 10வது ரவுண்டு போட்டி நடந்தது. இருவரும் சம பலத்தில் இருந்ததால் 36 நகர்த்தலுக்கு பின் டிரா செய்ய ஒப்புக் கொண்டனர். இதையடுத்து இருவரும் தலா 5 புள்ளிகள் பெற்று சம நிலையில் உள்ளனர். தொடர்ந்து 6வது முறையாக இருவர் இடையிலான போட்டி டிராவில் முடிந்துள்ளது. மீதமுள்ள 4 ரவுண்டு போட்டிகளில் இன்னும் 2.5 புள்ளி பெறுபவருக்கு உலக சாம்பியன் பட்டம் கிடைக்கும்.
The post செஸ் சாம்பியன்ஷிப் 10வது ரவுண்டு: மீண்டும் டிரா!: சம நிலையில் குகேஷ் – லிரென் appeared first on Dinakaran.