- விநாயகர் சிலை
- Dhenkanikottai
- தேங்கனிகோட்டை தெர்பெட்
- விநாயகர்
- நவக்கிரக
- மங்கல வியாத்தியம்
- சுப்ரபாத சேவா
- மகா கணபதி பூஜை
தேன்கனிக்கோட்டை, டிச.7: தேன்கனிக்கோட்டை தேர்பேட்டை பகுதியில், பழமை வாய்ந்த அரச மரத்தடி உள்ளது. தினசரி ஏராளமானோர் இளைப்பாறி செல்லும் அவ்விடத்தை புதுப்பித்து விநாயகர் சிலை, நவகிரக சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. மங்கள வாத்தியம், சுப்ரபாத சேவை, மகா கணபதி பூஜை, நவகிரக பூஜை, மிருத்யுஞ்சய பூஜை, மகா கும்ப பூஜை, ஹோமம், பூர்ணாகுதி, கும்பாபிஷேகம், மகா அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து விநாயகர், நவகிரகத்திற்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜை நடைபெற்றது. சுவாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
The post விநாயகர் சிலை பிரதிஷ்டை விழா appeared first on Dinakaran.