×

மது விற்ற பெண், தொழிலாளி கைது

ஊத்தங்கரை, டிச.19: கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை, காவல்நிலைய எஸ்ஐ பாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் வெப்பாலம்பட்டி பகுதியில் நேற்று ரோந்து சென்றனர். அப்போது பெட்டிக்கடையில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து, கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது தெரியவந்தது. இதையடுத்து கடைக்காரரான அதேபகுதியை சேர்ந்த லட்சுமி (40) என்பவரை போலீசார் கைது செய்து, 40 பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதேபோல், சிங்காரப்பேட்டை எஸ்ஐ நித்யா மற்றும் போலீசார், புளியானூர் பகுதியில் ரோந்து சென்ற போது, கூடுதல் விலைக்கு மது விற்றுக்கொண்டிருந்த தொழிலாளி பெருமாள் (50) என்பவரை கைது செய்தனர்.

The post மது விற்ற பெண், தொழிலாளி கைது appeared first on Dinakaran.

Tags : Uthankarai ,SI Balakrishnan ,Uthankarai Police Station ,Krishnagiri District ,Weppalampatti ,Lakshmi ,
× RELATED பாம்பாறு அணைக்கு நீர்வரத்து சரிவு