கோத்தகிரி: அம்பேத்கர் புத்தகத்தை விஜய் வெளியிட்டது வருத்தமா? என்று சீமான் பதிலளித்து உள்ளார். நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் செயல்வீரர்கள் கலந்தாய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. தொடர்ந்து அவர் கோத்தகிரியில் உள்ள படுகர் இன மக்களின் குலதெய்வமான ஹெத்தையம்மன் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து படுகர் இன மக்களின் குலதெய்வமான ஹெத்தையம்மனுக்கு காணிக்கை செலுத்தி சிறப்பு வழிபாடு செய்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: ஒரு ஐபிஎஸ் அதிகாரி செய்கிற தவறால் ஆயிரக்கணக்கான ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு கெட்ட பெயர் ஏற்படுகிறது. ஒரு கட்சியை எதிர்த்து தொடர்ச்சியாக குரல் செய்தியை வெளியிடுவது, கைது செய்து அலைபேசியில் உள்ள குரல் செய்தியை எடுத்து அதை ஒரு கட்சியின் தகவல் தொழில்நுட்ப பிரிவுக்கு கொடுத்து அதை வெளியிடுவது, எங்கோ ஒரு இடத்தில் தவறு செய்தால் அவரை கைது செய்து அடித்து சிறைப்படுத்துவது, சித்ரவதை செய்வது என்பது அவருடைய வேலை இல்லை. ஆனால் அவர் அதை செய்கிறார்.
எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவுக்கு என்னையும் அழைத்தனர். முதல்வர் ஸ்டாலின், காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி உள்ளிட்ட பலரையும் அழைத்திருந்தனர். திருமாவளவன் வெளியிட்டு நான் பெற்றிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். விஜய் அம்பேத்கர் புத்தகத்தை வெளியிடுவதை வரவேற்கிறேன். அம்பேத்கரை மக்கள் மத்தியில் யார் கொண்டு சேர்த்தாலும் மகிழ்ச்சி தான். இவ்வாறு அவர் கூறினார்.
The post அம்பேத்கர் புத்தகத்தை விஜய் வெளியிட்டது வருத்தமா?.. சீமான் விளக்கம் appeared first on Dinakaran.